கடும்மழை வீழ்ச்சிப்போக்கு- ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அதிகளவிலான மழை பொழிகின்ற சந்தர்ப்பத்தில் அதன் பருமன் நிலத்தில் விழுகின்றபோது மண்ணானது நீரோடு அடித்து செல்லப்படும். இதன் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக இந்த மண்ணரிப்பானது பங்களாதேஷ், கலிபோர்னியா, சீனா, மடகஸ்கார் ஆகிய பகுதிகளில் அதிகளவாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளப்பெருக்கு- ஒரு பிரதேசத்தில் உள்ள நதி நீரின் கொள்வனவு அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அந்த நீரானது அருகில் உள்ள மண்ணினையும், சேர்த்து எடுத்து கொண்டு செல்கின்றது. இதனால் மண்ணரிப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக சீனாவில் கொங்கொங் நதியானது 1600 மில்லியன் தொன் மண்ணினை மஞ்சள் கடலுடன் எடுத்து செல்கின்றது. இதன் காரணமாக 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதவிர அமெரிக்காவில் மிசூரி மிசிசிப்பி நதியினால் வருடாவருடம் 448 தொன் பரல் கடலோடு எடுத்து செல்லப்படுகின்றது.
கடலலையின் செயற்பாடு- கடற்கரையோரத்தில் அலைகளின் தொழிற்பாடு காரணமாக தின்னல் செயற்பாடு அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் கரையோரத்தில் உள்ள மண் அரித்தல் நிலைக்கு உட்படும். குறிப்பாக இலங்கையில் தென்பகுதியில் அதிகளவிலான அரித்தல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அத்துடன் 665 சதுரகிலோமீட்டர் கரையோரப்பகுதி பாதிப்படைந்துள்ளது.
காற்று- தாவரப்போர்வைகள் குறைவாக உள்ள பகுதிகளிலும் காற்றின் தீவிரத்தன்மை அதிகமாக உள்ள பகுதியிலும் காற்றின் அரித்தல் செயற்பாடுகள் காரணமாக மண்ணானது ஒரு இடத்தில இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்து செல்லப்படும். இதன் காரணமாக அந்த பகுதிகளில் அதிகளவு மண்ணரிப்பு நிகழ்கின்றது. குறிப்பாக கோபி, சகாரா, அட்டகாமா, அரிசோனா, பற்றகோனியா ஆகிய பாலைவன பகுதிகளில் மண்ணரிப்பு அதிகமாக நிகழ்கின்றது.
காடழிப்பு- அதிகரித்த சனத்தொகைக்கு ஏற்ப குடியிருப்புக்களை அமைக்கும் பொருட்டு காடழிப்பு துரிதமாக இடம்பெறுகின்றது. இதனால் மண்ணின் பிடிமானத்தன்மை குறைகின்றது. இவ்வாறு தாவரப்போர்வைகள் இல்லாது போவதனால் மண்ணரிப்பு துரிதகதியில் நடைபெறுகின்றது. 2008ம் ஆண்டுகளில் அமேசான் காடுகள் 8% அழிக்கப்பட்டுள்ளன. இதனால் தென்னமெரிக்க நாடுகளான பிரேசில் ஆர்ஜென்டினா ஆகிய பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இதுமட்டுமில்லாது இந்தியாவிலும் வருடாவருடம் 1.5 தொன் காடுகள் அழிக்கப்படுகின்றன.
உயர்பிரதேசங்களில் கட்டிடங்களை அமைத்தல்- மலைப்பாங்கான பகுதிகளில் இன்று மக்களின் தோட்ட குடியிருப்புக்கள் அமைக்கப்படுகின்றன. இதன்போது தாவரப்போர்வைகள் வெட்டியகற்றப்படுகின்றது. இதன்காரணமாக சாய்வான பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இதனை இலங்கையின் மலைநாட்டு பகுதி, இந்தியாவின் மலைப்பகுதிகள் ஆகியவற்றில் அவதானிக்கலாம்.


No comments:
Post a Comment